தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு
மட்டக்களப்பில் மாவீரர் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி நேற்று(01.11.2026) ஆரம்பித்து மாவீர்களின் கல்லறைக்கு கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் இடம்பெறவுள்ள நிலையில் நவம்பர் மாதம் மாவீரர் மாதமாக அறிவித்த அதன் ஆரம்ப நாள் முதலாம் திகதியை முன்னிட்டு நேற்று மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து மாவீரர்களின் துயிலும் இல்லங்களில் உள்ள கல்லறைகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி மாவீரர் மாதம் ஆரம்பித்து வைத்தனர்.
அடுத்த சில மணி நேரங்களில் தீவிர சூறாவளி புயலாக வலுப்பெறும் முரசு! வானிலை மாற்றம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை


உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri