சிறைக்குள் நடப்பது என்ன..! 28 மரணங்களை மீண்டும் நினைவூட்டிய நாமலின் பதிவு
சிறைச்சாலைகளில் கைதிகள் தாக்கப்படுதல், சித்திரவதைக்கு உள்ளாகுதல் மற்றும் உயிரிழத்தல் போன்ற சம்பவங்கள் தனித்தனியான சம்பவங்கள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உயிரையும் மனித கௌரவத்தையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் தவிர்க்க முடியாத பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாமலின் பதிவு
தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Being in custody has made one reality impossible to ignore: behind prison walls are human beings whose lives depend entirely on the institutions entrusted with their protection. People are being beaten, allegedly tortured and dying while in State custody. These are not isolated incidents. The Negombo Prison tragedy alone resulted in 28 deaths. Medical findings presented in court revealed that 17 victims died from gunshot injuries, while the remaining 11 died from blunt-force assaults. More recently, the deaths of 29-year-old Ishara Harshakumara in Homagama Police custody and a 41-year-old man in Kobeigane, Kurunegala, have raised further serious questions about the treatment and protection of people in State custody. The Human Rights Commission has raised grave concerns and called for independent investigations. Yet, nearly four months after Negombo, forensic reports remain pending, families are still waiting for answers, and accountability remains unresolved. The rule of law loses its meaning when it is applied selectively. Justice must stand above political interests, protect individual rights and remain impartial, whoever the individual may be. A person’s freedom may be restricted, but their right to life, dignity and protection cannot be taken away. The question is simple: Who protects those who are behind bars, and who ensures that the truth does not die with them? The State has a duty to protect every life in its custody. That duty is not optional. -Admin
— Namal Rajapaksa (@RajapaksaNamal) November 2, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் 28 பேர் உயிரிழந்ததாகவும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளின்படி அவர்களில் 17 பேர் துப்பாக்கிச் சூட்டினாலும், ஏனைய 11 பேர் கூர்மையற்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த சம்பவம் இடம்பெற்று சுமார் நான்கு மாதங்கள் கடந்துள்ள போதிலும், தடயவியல் மருத்துவ அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்னமும் நீதிக்காகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தொடர்பில் கேள்வி
மேலும், ஹோமாகம பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த 29 வயதுடைய இஷார ஹர்ஷகுமார மற்றும் குருநாகல், கொபெய்கனே பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த 41 வயதுடைய நபர் ஆகியோரின் மரணங்களும் அரச காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பு தொடர்பில் கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் கவலை வெளியிட்டு, சுயாதீன விசாரணைகளை கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் என்றும் அரசியல் தேவைகளுக்கு அப்பால் நீதி நியாயமாகவும் பாரபட்சமின்றியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஒருவரின் சுதந்திரத்தை மட்டுப்படுத்த முடியுமே தவிர, அவர்களின் வாழ்வுரிமை, கௌரவம் மற்றும் பாதுகாப்பைப் பறிக்க முடியாது என்றும் அரச காவலில் உள்ள ஒவ்வொரு உயிரையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கைவிட முடியாத கடமை என்றும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri