பிள்ளையான் கைது விவகாரம்!நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
எந்தவொரு நியாயமான காரணமுமின்றி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, குறித்த வழக்கானது எதிர்வரும் 18ஆம் திகதி விசாரிக்கப்பட உள்ளது.
இந்த மனு இன்று (09) உயர் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போது, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம், இதனை விசாரணைக்காக எதிர்வரும் 18ஆம் திகதி அழைப்பதற்கும் உத்தரவிட்டது.
மனுதாரர் கோரிக்கை
இந்த மனுவின் பிரதிவாதிகளாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் உள்ளிட்ட குழுவினர் பெயரிடப்பட்டுள்ளனர்.

எந்தவொரு நியாயமான காரணமுமின்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டத்திற்குப் புறம்பானது எனவும், இதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சனி–சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri