மட்டக்களப்பில் நாமல் ராஜபக்சவுக்கு ஆசீர்வாதம் வேண்டி விசேட பூஜை வழிபாடு
கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி மட்டக்களப்பில் விசேட பூஜை வழிபாடு நடைபெற்றது.
இன்று (8.9.2026) புன்னைச்சோலை காளி கோயில் மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
விசேட ஆசீர்வாத பூஜை
இது தொடர்பில் மாவட்ட அமைப்பாளர் கருத்து தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ மக்களின் அரசியலுக்காக வெகுவிரைவில் பயணிக்க உள்ள அவருக்கு நல்லாசி வேண்டி மட்டக்களப்பு பூராகவும் அனைத்து மத தலங்களுக்கும் சென்று ஆசீர்வாதத்தை பெறுவதற்காக திட்டமிட்டுள்ளோம்.

அதன் பிரகாரம் இன்று மட்டு புன்னைச்சோலை காளி கோயில் இந்த விசேட ஆசீர்வாத பூஜையை இன்று ஆரம்பித்துள்ளதாக மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் தெரிவித்தார்.