சிங்கராஜ வனப்பகுதிக்கு படையெடுத்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்
கடந்த சில மாதங்களில் மொத்தம் 35000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிங்கராஜ வனப்பகுதியை பார்வையிட வந்துள்ளதாக வன பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சிங்கராஜ வனப்பகுதியை பார்வையிட இந்த ஆண்டு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
வன பாதுகாப்பு
அத்துடன், வனப்பகுதியை சேதப்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை அதிகரிக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் தகவல்களை வழங்குவதற்கான மையப்படுத்தப்பட்ட தரவுக் கட்டமைப்பொன்றைப் பராமரிக்காமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
