சிறைச்சாலையில் கைதியின் மூன்று மாதக் குழந்தை உயிரிழப்பு – விரிவான அறிக்கை கோரிய அமைச்சர்
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதி ஒருவரின் மூன்று மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில், விரிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தாய்ப்பால் குழந்தையின் சுவாசப் பாதைக்குள் சென்றதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகவே குழந்தை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துமாறு
சம்பவத்தின் பின்னணி மற்றும் உயிரிழப்புக்கான சூழ்நிலைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஊடாக விரிவான அறிக்கையைப் பெற்றுக்கொள்ள அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கிடையில், இந்த விடயத்தில் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை மகளிர் பணியகம் மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் ஆகியவற்றுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
வாஷிங்டனில் ரசாயன ஆயுதத் தாக்குதலுக்குத் திட்டமிடும் ஈரான்: சுட்டிக்காட்டும் அமெரிக்க உளவுத்துறை News Lankasri
Bigg Boss 10: நீயும், உன் கூட்டமும் முடிந்தால் என்னை அடிச்சி பாருங்கடா? டிடிஎஃப்-ஐ வைத்து மக்களை நேரடியாக தாக்கிய ஜேசன் Manithan