அரசியல் அநாதையாகியுள்ள வீரவன்ச! ராஜபக்சர்கள் கண்டுகொள்ளாததால் சூழ்ச்சி
தங்களின் அரசியலில் பெரியண்ணன் என விமல் வீரவன்சவை கருதிய நாமல் ராஜபக்ச உள்ளிட்டோர் தற்போது தனியாக செயற்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மக்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பதற்காக விமல் வீரவன்ச மிகவும் தரம் தாழ்ந்த பிரசார நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் மற்றும் அவரது மனைவி தொடர்பில் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள பல வழக்குகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அநுராதபுரம் புனித நகரம்
இவ்வாறான நிலையில் அநுராதபுரம் புனித நகரம் தொடர்பில் திரிபுபடுத்தப்பட்ட மற்றும் முற்றிலும் தவறான தகவல்களை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவியை இலக்கு வைத்து இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அமைச்சர் இதனை பொருட்படுத்தவில்லை என குறிப்பிடப்படுகின்றது. இதனால், விமல் வீரவன்ச மேலும் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ்: சூர்யாவின் சீன் படம் வெளிவந்த 12 நாளில் உலகம் முழுவதும் செய்துள்ளா வசூல்... Cineulagam