உக்ரைனில் பணய கைதிகளாக இந்திய மாணவர்கள் - ரஷ்யா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 7 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
இந்திய மாணவர்களை உக்ரைன் இராணுவம் பணய கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த 7 நாட்களாக ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து ரஷ்ய அதிபர் புடினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் ரஷ்யா வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், ரஷ்யாவிற்கு கிடைத்த தகவலின் படி சில மாணவர்களை உக்ரைன் இராணுவம் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதுடன் அவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி வருவதாகவும், அவர்களை ரஷ்ய எல்லைக்கு செல்ல விடாமல் உக்ரைன் இராணுவம் தடுத்து வருவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்...
உக்ரைன் தலைநகரில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு
ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மோசமான நிலை இலங்கைக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது?
உக்ரைனுடனான போரில் படையினர் உயிரிழப்பு - முதல் முறையாக எண்ணிக்கையை வெளியிட்டுள்ள ரஷ்யா
ஸ்வீடன் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்!

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
