உக்ரைன் தலைநகரில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு
உக்ரைன் தலைநகர் கிவ்வில் உள்ள ரயில் நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சக ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே, உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யப் படைகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ரஷ்ய துருப்புக்கள் உக்ரைன் தலைநகர் கீவ் மீது குண்டுவீசி வருவதாகவும், பல அகதிகள் அண்டை ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அனைத்து பிரான்ஸ் குடிமக்களும் விரைவில் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு அவர் வலியுறுத்தினார். போரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், உக்ரைனின் இறையாண்மையை அந்த நாடு தொடர்ந்து பாதுகாக்கும் என்றும் கூறினார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தடுக்க நாமும் கையெழுத்திடுவோம்