உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தடுப்பதற்கு தமிழ் அமைப்பின் கையெழுத்து முயற்சி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை உலகம் முழுவதிலுமிருந்து துன்புறுத்தப்பட்ட சக தமிழர்களான நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என மனித உரிமைகளை மதிக்கின்ற சுயாதீன அமைப்பு ஒன்று கையெழுத்து போராட்டம் ஒன்றை நடாத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.
எமது கையெழுத்தின் பலத்தால் உக்ரைனின் மக்களின் அவலத்தை தடுத்திட குறித்த லிங்கை அழுத்தி எமது கையெழுத்தை பதிவு செய்வோம்
இது குறித்து அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த காலங்களில் இதுபோன்ற அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை நாங்கள் அனுபவித்துள்ளோம்.
இந்தநேரத்தில், பாதுகாப்பிற்காகவும், விடாமுயற்சிக்காகவும் பிரார்த்தனையில் உங்களுக்கு பக்கபலமாக நிற்கிறோம். குழந்தைகளை இழந்த எங்கள் தாய்மார்கள் உங்களுக்காக கூடுதல் பிரார்த்தனை செய்வார்கள் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.
ஆக்கிரமிப்பு படைகளை எதிர்த்த வீரர்கள் உங்கள் துணிச்சலான வீரர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் மீதும் உங்கள் மக்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுங்கோன்மையை எதிர்த்து நிற்க ஊக்குவிப்பார்கள்.
எங்கள் அன்பையும் பாதுகாப்பையும் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம், நேடோ மற்றும் ICJ போன்ற அமைப்புகள் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை தண்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் வலியை நாங்கள் உணர்கிறோம், விடுதலைக்கான உங்களின் பசி மற்றும் சுதந்திர தாகத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
துன்புறுத்தல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளால் பாதிக்கப்பட்ட அனைத்து மனிதகுலத்தின் கடைசி தலைமுறையாக நமது தலைமுறை இருக்கட்டும்.” என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.