ஆளும் தரப்புடன் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த - கோட்டாபய - மைத்திரி
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாடுகளுக்கு மத்தியில், ஆளும்தரப்புடன் முன்னாள் ஜனாதிபதிகள் இணைந்து கொண்டமை குறித்து தென்னிலங்கையில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவின் 77 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் கடந்த 26 ஆம் திகதி இரவு விசேட வரவேற்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
முக்கிய அரசியல் தலைவர்கள்
இந்த நிகழ்வில் இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
அனைவரும் ஒரே மேசையில் அமர்ந்திருந்து கலந்துரையாடியமை அரசியல் மட்டத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது.
இந்த சந்திப்பின் போது இந்திய - இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் மற்றும் நட்புறவு குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 19 மணி நேரம் முன்
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri