தென்னிலங்கையில் கோர விபத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த துயரம்
மாத்தறை, ஹக்மனை, வேபத்தைர, கட்டுபெலே சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடனும் கார் ஒன்றுடனும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹக்மனை, பெலியத்த வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஏஷான் பிரபோத என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கல்வி பயிலும் மாணவர்கள்
காயமடைந்தவர் 16 வயதுடைய தனுக்க தேஜான் என்பவராகும். இருவரும் மாத்தறை மெதடிஸ்த மத்திய மகா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஹக்மனை - வலஸ்முல்ல வீதியில் பயணித்த சிறிய லொறி ஒன்று வீதியில் நிறுத்தப்பட்டு பின்நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.
இதன்போது லொறிக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் லொறியுடன் மோதியுள்ளது.
இந்த நிலையில் எதிர்த்திசையில் வந்த கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.
படுகாயமடைந்த மாணவன் கங்கொடகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் லொறி மற்றும் கார் ஓட்டுநர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹக்மனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam