இந்தியாவில் விமான விபத்து - மகாராஷ்டிரா துணை முதல்வர் உள்ளிட்ட 6 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் மகாரஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் உயிரிழந்துள்ளார்.
மேலும், விமான விபத்தில் துணை முதல்வர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
பாராமதியில் இன்று (28) நடைபெறவிருந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக துணை முதல்வர் இன்று காலை மும்பையிலிருந்து புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மீட்பு பணிகள் தீவிரம்
இதன்போது மகாராஷ்டிராவின் பாராமதியில் உள்ள ஒரு விமான நிலையத்திற்கு அருகில் விமானம் தரையிறங்க முயன்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதி வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது.

குறித்த விபத்து நடந்த இடத்திற்கு பாதுகாப்பு மற்றும் அவசர சேவை குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளன.
விபத்துக்கான காரணம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு அல்லது வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
மீட்புப் பணிகள் முடிந்த பின்னர் உயிரிழப்பு எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam