இலங்கையில் முதன்முறையாக மிகப்பெரிய நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு
மாத்தறை, பிடபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குழாய் கிணறு தோண்டும் போது, மிகப்பெரிய நீர் ஆதாரத்தை தேசிய நீர்வளம் மற்றும் நீர் வழங்கல் சபை கண்டுபிடித்துள்ளது.
நிமிடத்திற்கு 10,000 லிட்டர் தொடர்ச்சியான ஓட்டம் கொண்ட நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என தென் மாகாணத்திற்கு பொறுப்பான புவியியலாளர் இந்திரஜித் கமகே தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் மன்னார், மடு பகுதியில் இதுபோன்ற மிகப்பெரிய நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டது, அங்கு நிமிடத்திற்கு 7,000 லிட்டர் ஓட்டம் ஏற்பட்டது.
நிலத்தடி நீர்
பாறை அடுக்குகளை ஆய்வு செய்து, தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி அடுக்கு முறிவுகள் மூலம் நிலத்தடி நீர் இருக்கும் இடங்களை அடையாளம் கண்டு இந்த குழாய் கிணறு தோண்டப்பட்டது.

அதற்கமைய, எதிர்காலத்தில், பிடபெத்தர, மொரவக்க மற்றும் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நீர்வளம் மற்றும் நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 14 மணி நேரம் முன்
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri