வாகனங்களில் பொருத்தப்பட்ட ஆபத்தான பாகங்கள்..! பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு
வீதிப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய வகையில் பழுதுபட்ட நிலையிலிருந்த வாகனங்கள் மற்றும் சட்டவிரோதமான முறையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
வெல்லவாய மற்றும் ஊவா குடாஓயா பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர்கள் மற்றும் மோட்டார் வாகன பரிசோதகர்கள் இணைந்து விசேட வாகனத்தணிக்கை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.
24 வாகனங்களுக்கு தடை உத்தரவு
இதன்போது வீதி போக்குவரத்திற்குப் பொருத்தமற்ற மற்றும் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 24 வாகனங்களுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறைபாடுகளுடன் உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் சட்டவிரோத பாகங்களை பொருத்தியிருந்த 24 வாகனங்களின் சாரதிகளுக்கு எதிராகவே இவ்வாறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த சாரதிகளுக்கு வாகனங்களிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிடப்பட்ட காலப்பகுதிக்குள் குறைபாடுகளைச் சரிசெய்ய தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri