அனுராதபுர பேரணியில் சிக்கிய இரகசிய காணொளிகள்! மகிந்தவை காப்பாற்றும் மர்ம தாயத்து
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராதபுரத்தில் பொதுஜன பெரமுன கட்சியினரால் நடத்தப்பட்ட பேரணிக்கு வந்த ஆதரவாளர்களில் பலர் மது போதையில் இருந்ததாகவும், அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும் மது வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும், பேரணி முடிந்த பின்னர் பலர் மதுபோதையில் இருக்கும் விதத்தில் பல காணொளிகள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொண்ட நிலையில், அவர் கையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் மர்மமான கோல் தொடர்பில் மீண்டும் கவனம் திரும்பியுள்ளது.
பொது நிகழ்வுகளில் மகிந்த ராஜபக்ச கையில் வைத்திருக்கும் இந்தப் பொருள், தங்க முலாம் பூசப்பட்ட கோல் அல்லது செங்கோல் போன்ற வடிவத்தில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பொருள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் நீண்டகாலமாக நிலவி வருகின்றன.
குறிப்பாக, இது அதிர்ஷ்டம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் பொருளாகவும், ஜோதிட ஆலோசனைகளின் அடிப்படையில் பயன்படுத்தப்படுவதாகவும் சில தரப்பினரால் கூறப்படுகிறது.
மேலும், மகிந்த ராஜபக்ச ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், அரசியல் முடிவுகள் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெற்றதாகவும் பல ஆண்டுகளாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவரது கைகளில் காணப்படும் பல்வேறு மோதிரங்கள், தாயத்துக்கள் உள்ளிட்டவையும் இதனுடன் தொடர்புபடுத்தப்பட்டு பேசப்பட்டுள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை! 21 ஆண்டுகளுக்குப் பின் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் - அம்பலமான ஆதாரங்கள்