ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையரின் மோசமான செயல் - யுவதி உட்பட 6 இலங்கையர்களுக்கு பாதிப்பு
ஐரோப்பிய நாடான ரோமேனியாவின் கொன்ஸ்டன்டா பகுதியில் ஆபத்தான முறையில் செயற்பட்ட இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Năvodari மற்றும் Lumina நகரங்களுக்கு இடையே இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இலங்கையர் ஓட்டிச்சென்ற சிறிய ரக வேன் வளைவு ஒன்றில் எதிர்த்திசையில் பயணித்து, பெண் ஒருவரின் கார் மீது மோதியதில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கையரின் சாரதி அனுமதிப்பத்திரம்
சந்தேக நபரான இலங்கையரின் சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து கொன்ஸ்டன்டா மாவட்ட பொலிஸ் பரிசோதகர் அலுவலகப் பிரதிநிதிகள் தெரிவிக்கையில்,
வீதி விபத்து கடந்த திங்கள்கிழமை காலை 6:50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், இலங்கையைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் கொன்ஸ்டன்டாவிலிருந்து Tulcea நோக்கி வேனை ஓட்டிச் சென்றுள்ளார்.
9 பேர் காயம்
அப்போது, வேன் வலதுபுற வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் நுழைந்து, எதிரே 22 வயதுடைய யுவதி ஓட்டி வந்த கார் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் 45 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்ததுடன், ஓட்டுநர் உட்பட இலங்கையை சேர்ந்த மேலும் 6 ஆண்களும், காரை ஓட்டிவந்த பெண்ணும் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் குற்றவியல் வழக்கைப் பதிவு செய்து, விபத்துக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri