இலங்கைக்கு விடுக்கப்பட்ட 12 மணிநேர மின்னல் எச்சரிக்கை - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இன்று(29.10.2026) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என்றும் அறிவிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான அறிவிப்பு
இதற்கமைய, இந்த பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மின்னல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் அபாயங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
நாமல் ராஜபக்சவின் பிணை மனு விசாரணை: சர்ச்சையை கிளப்பியுள்ள அலி சப்ரியின் கருத்து - எழுப்பப்பட்டுள்ள கேள்வி