அஸ்வசும பயன் பெறும் தகுதியை இழந்த 1.4 மில்லியன் குடும்பங்கள்: மேன்முறையீடு செய்ய கால அவகாசம்
சுமார் 1.4 மில்லியன் குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி உதவிகளைப் பெறுவதற்கான தகுதியை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நலன்புரிப் பலன்கள் சபையால் வெளியிடப்பட்டுள்ள முதலாவது இற்றைப்படுத்தப்பட்ட பயனாளிகள் பட்டியலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி மொத்தம் 1,391,830 குடும்பங்கள் இந்த நலன்புரி உதவிகளைப் பெறுவதற்கான தகுதியை இழந்துள்ளன.
ESNWEZ
கடந்த 7ம் திகதியுடன் நிறைவடைந்த தகவல் இற்றைப்படுத்தல் செயன்முறையில் 2,383,630 குடும்பங்கள் பங்கேற்றிருந்தன.
இதில் 'வறிய' மற்றும் 'மிகவும் வறிய' ஆகிய பிரிவுகளின் கீழ் 991,800 குடும்பங்கள் மட்டுமே கொடுப்பனவுகளைப் பெறத் தகுதி பெற்றுள்ளதாக நலன்புரிப் பலன்கள் சபை தெரிவித்துள்ளது.
மிகவும் வறிய பிரிவு : தகுதி பெற்ற குடும்பங்கள்: 363,142, மாதாந்த கொடுப்பனவு: ரூ. 17,500
வறிய பிரிவு : தகுதி பெற்ற குடும்பங்கள்: 628,658, மாதாந்த கொடுப்பனவு: ரூ. 10,000
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள பயனாளிகள் பட்டியல், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் பகிரங்கமாகத் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், நலன்புரிப் பலன்கள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.wbb.gov.lk இலிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முதல் நவம்பர் 11, 2026 வரை அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பில் ஏதேனும் மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனை இருந்தால் அவற்றை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
eservices.wbb.gov.lk இணையத்தளம் வழியாக, அல்லது பிரதேச செயலகங்கள் மற்றும் சபையின் இணையத்தளத்தில் பெறப்படும் படிவங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகளை அடையாளம் வெளிப்படுத்தாமலும் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 740,127 குடும்பங்களின் தகவல்களைச் சரிபார்த்து, அதனடிப்படையில் தயாரிக்கும் இரண்டாவது இற்றைப்படுத்தபட்ட பயனாளிகள் பட்டியலை வரும் டிசம்பர் மாதத்தில் வெளியிட சபை திட்டமிட்டுள்ளது.
முதலாவது பட்டியலில் தகுதி பெற்றுள்ள புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நவம்பர் 27 அன்று அவர்களின் 'அஸ்வெசும' வங்கிச் கணக்குகளில் நேரடியாக வைப்பு செய்யப்படும்.
வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான கடிதங்கள் நவம்பர் 12 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam