கட்டிடப் புனரமைப்பு என்ற போர்வையில் 5.1 மில்லியன் ரூபாய் மோசடி - லலித் பியும் பெரேரா அதிரடி கைது
தேசிய இராணுவ சேவைகள் சபையின் முன்னாள் தலைவர் மற்றும் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா, இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை இன்று(28.10.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறையின் சமாபுரப் பகுதியில் அமைந்துள்ள நிலம் மற்றும் கட்டிடங்கள் அரசாங்க நிலம் என்று கூறி, அவற்றுக்கு இடைக்காலக் குத்தகை ஒப்பந்தங்களைத் தயாரித்து, தேசிய இராணுவ சேவைகள் சபையிடமிருந்து குத்தகை அடிப்படையில் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இராணுவ சேவைகள் சபையின் நிதியிலிருந்து ரூ. 3.8 மில்லியன் சட்டவிரோதமாகவும் முறையற்ற வகையிலும் மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்பட்டதாகவும், மேலும், பணிப்பாளர் குழுவின் முறையான ஒப்புதல் இன்றி, கட்டிடப் புனரமைப்புக்காக இராணுவ சேவைகள் சபையின் நிதியிலிருந்து ரூ. 1.3 மில்லியன் வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இத்தகைய முறையற்ற கொடுப்பனவுகளைச் செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 5.1 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சந்தேக நபர் இன்று(28) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை தொடர்பில் தீவிரமடையும் பேச்சுவார்த்தைகள்
பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam