பிரித்தானியாவில் இருந்து இலங்கை செல்வோருக்கு மகிழ்ச்சித் தகவல்
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நேரடி விமானச் சேவைகளை11 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான சேவையை பிரபலப்படுத்தும் நோக்கில் விசேட பயணக் கட்டணங்களை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, கட்டணங்களுக்கு 10 சதவீதம் வரை விசேட தள்ளுபடிகளும் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
விமான கட்டணங்கள்
இந்த சேவைக்காக போயிங் 777 ரக விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அதில் Club World, World Traveller Plus மற்றும் World Traveller ஆகிய மூன்று ஆசன வகுப்புகளை பெற்றுக்கொள்ள முடியும்.

அதற்கமைய, கொழும்பிலிருந்து லண்டன் கெட்விக் வரை பயணிக்கும் பயணிகளுக்கு World Traveller பொருளாதார வகுப்பின் இருவழிப் விமான டிக்கெட்டுகளை 255,000 ரூபாவில் இருந்து முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
விசேட சலுகையின் ஊடாக பெருமளவு பிரித்தானியர்கள் இலங்கைக்கு சுற்றுலா வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானச் சேவை
இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, வர்த்தக மற்றும் வணிகத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தவும் இது வாய்ப்பாக அமையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலப்பகுதியின் பின்னர் மீண்டும் இலங்கைக்கு விமானச் சேவைகளை ஆரம்பிப்பது ஒரு விசேட மைல்கல்லாகும் என பிரிட்டிஷ் எயாயர்வேஸின் முதன்மைத் திட்டமிடல் மற்றும் மூலோபாய அதிகாரி நீல் செர்னாப் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இலங்கை மீண்டும் உலகளாவிய வான்வழிச் சேவை வலையமைப்புடன் இணைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயிலர் 2 காட்சி ரத்து, பணத்தை மட்டும் திருப்பி கொடுத்தால் போதுமா.. பொங்கிய சீரியல் நடிகர் Cineulagam