மயிலத்தமடு - மாதவனை பகுதியில் பண்ணையாளர் சோமசுந்தரம் கடத்தல் சம்பவம்
மட்டக்களப்பு - மயிலத்தமடு - மாதவனை பகுதியில் பண்ணையாளர் சோமசுந்தரம் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கரடியனாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர் நேற்று (28) விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று மொறக்கட்டாஞ்சேனை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட மண்டபத்தைப் பண்ணையாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
கைது செய்யப்பட்ட பண்ணையாளர் சோமசுந்தரத்தை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பண்ணையாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, பண்ணையாளர் சோமசுந்தரத்தை உடனடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட பண்ணையாளர் சோமசுந்தரம் விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam