நெடுந்தீவு படகு சேவைகள் முடக்கம்: கடலில் தத்தளித்த குமுதினி

Jaffna Tourism Northern Province of Sri Lanka
By Theepan Oct 28, 2026 03:40 PM GMT
Report

யாழ்ப்பாணம் , குறிகட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்று படகுகளும் பழுதடைந்துள்ளமையால் , நெடுந்தீவுக்கான போக்குவரத்து பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

குறிகட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டிருந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நெடுந்தாரகை மற்றும் வடதாரகை என்பன ஏற்கனவே பழுதடைந்துள்ள நிலையில் , குமுதினி படகு சேவையில் ஈடுபட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம்(27.10.2026) மாலை 4.30 மணியளவில் குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பெண்கள் , குழந்தைகள் முதியவர்கள் என 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த குமுதினி படகு , புறப்பட்டு சில நிமிடங்களில் இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்தது.

தத்தளித்த படகு

அதனை அடுத்து விரைந்து செயற்பட்ட கடற்படையினர் தமது படகில் சென்று , குமுதினியில் இருந்த பயணிகளை மீட்டு , குறிகட்டுவான் பகுதிக்கு மீண்டும் அழைத்து வந்தனர்.

நெடுந்தீவு படகு சேவைகள் முடக்கம்: கடலில் தத்தளித்த குமுதினி | Neduntivu Ferry Services Disrupted Kumuthini

குமுதினி படகு பழுதடைந்தமை தொடர்பிலும் , நெடுந்தீவு நோக்கி வருகை தந்தவர்கள் குறிகட்டுவானுக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டமையை அறிந்து , நெடுந்தீவில் இருந்து "கரிகாலன்" எனும் தனியார் படகு குறிகட்டுவான் நோக்கி சென்று அங்கிருந்த பயணிகளை அழைத்துக்கொண்டு மீண்டும் நெடுந்தீவை சென்றடைந்தது.

அதேவேளை பழுதடைந்த குமுதினி படகும் நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

சுற்றுலாத்துறை வீழ்ச்சி 

இந்நிலையில் இன்றைய தினம்(28.10.2026) காலை 07 மணிக்கு நெடுந்தீவில் இருந்து சத்சரா எனும் தனியார் படகு, குறிகட்டுவானில் இருந்து மீண்டும் காலை 8.30 மணிக்கு நெடுந்தீவுக்கு நோக்கி பயணிக்க தயாரான போது அரச உத்தியோகஸ்தர்கள் , சுற்றுலாவிகள் , நெடுந்தீவு மக்கள் என பலர் படகில் ஏற காத்திருந்தமையால் , நெருக்கடிகள் ஏற்பட்டன.

நெடுந்தீவு படகு சேவைகள் முடக்கம்: கடலில் தத்தளித்த குமுதினி | Neduntivu Ferry Services Disrupted Kumuthini

 பலத்த சிரமங்கள் மத்தியில் குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

 குறிகட்டுவானில் இருந்து சுமார் ஒரு மணி நேர படகு பயணத்தின் பின்னரே நெடுந்தீவை அடைய முடியும். அவ்வாறான நீண்ட நேர பயணத்தின் போது , படகுகள் பழுதடைந்தல் , படகு சேவைகளில் ஏற்படும் தடங்கல்கள் என்பவற்றால் நெடுந்தீவு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் , நெடுந்தீவுக்கான சுற்றுலா துறையும் வீழ்ச்சி அடைவதாக தெரிவிக்கப்படுகிறது.

கிங்ஸ்பரி ஹோட்டலுக்குச் சென்ற கஸ்ஸப்ப தேரர்! சர்ச்சைக்குப் பின்னால் உள்ள உண்மை..

கிங்ஸ்பரி ஹோட்டலுக்குச் சென்ற கஸ்ஸப்ப தேரர்! சர்ச்சைக்குப் பின்னால் உள்ள உண்மை..

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நன்றி நவிலல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US