இரண்டு ஆண்டுகளில் பொலிஸ் காவலில் 17 பேர் உயிரிழப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 பேர் உயிரிழந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னிலை சோசலிக் கட்சியின் அரசியல்பீட உறுப்பினுர் புபுது ஜாகொட இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த அரசாங்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, அமைச்சு செயலாளர்கள் மற்றும் பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கக் கூடிய புதிய சட்டங்களை உருவாக்க முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்ட மூலம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் சட்ட மூலம் என்பன இந்த நோக்கத்திற்காக உருவாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட மூலங்கள் மோசமானவை என சுட்டிக்காட்டப்பட்டு வரும் நிலையில் சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் இரண்டு தினங்களுக்கு முன்னதாக இசார ஹர்ஷகுமார என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். இந்த மரணம் கொலை என்பதற்கான ஆதாரங்கள் அம்பலமாகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை பார்க்கும் போது இது கொலை என்பது தெளிவாக புலனாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இளைஞரின் மரணம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இளைஞா உயிரழிந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறிய போதிலும் விசாரணைகளில் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டதாகவும் உடலின் பல இடங்களில் தாக்குதல் மேற்கொண்டமைக்கான அடையாளங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் தடுப்புக் காவலில் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சந்தேக நபர்களுக்கு எவ்வித நியாயமும் வழங்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களைப் போன்றே இந்த அரசாங்கமும் இந்த தாக்குதல்கள் குறித்த விசாரணைகளை மந்த கதியில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் புதிய சட்ட மூலங்கள் ஊடாக சமூகத்தில் குரல் எழுப்பப்படுவதனை தடுத்து நிறுத்த முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam