கொரிய மொழி பரீட்சை தொடர்பில் போலி குறுஞ்செய்தி மோசடி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கொரிய மொழி பரீட்சை தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள் (SMS) அனுப்பும் மோசடி நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
போலி கணக்கு எண்ணை குறிப்பிட்டு, கொரிய மொழி பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கு பணம் செலுத்துமாறு கோரி இந்த மோசடி செய்திகள் அனுப்பப்படுவதாக வெளிப்பட்டுள்ளது.
கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்கள்
மேலும், இது ஒரு முழுமையான மோசடி என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இணையவழி முறையில் மட்டுமே வழங்கப்படும் என்று பணியகம் தெரிவித்துள்ளது.
பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பெயரிலான உத்தியோகபூர்வ வங்கிக்கணக்கு எண்களுக்கு மட்டுமே புலம்பெயர் தொழிலாளர்கள் பணம் செலுத்த வேண்டும் என்று பணியகம் அறிவுறுத்துகின்றது.
வங்கி கணக்கு தொடர்பான விபரம்
பரீட்சை கட்டணம் செலுத்துவதற்காக பெறப்படும் எந்தவொரு குறுஞ்செய்தியையும், பணியகத்தின் அவசர உதவி எண்ணான 1989-க்கு அழைத்து சரிபார்க்குமாறு பணியகம் அறிவுறுத்துகின்றது.
மேலும், அதன் உண்மை தன்மையை சரிபார்த்த பின்னரே, சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகளில் நிதியை வரவு வைக்குமாறும் பணியகம் கேட்டுக்கொள்கின்றது.
ராஜபக்சக்களுக்கு நெருக்கமான நபர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்கள் - பெண்ணின் வாக்குமூலத்தில் கசியவுள்ள இரகசியங்கள்