இலங்கை அரச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை எதிர்க்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு
இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள "அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
அத்துடன், அதில் கணிசமான திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஒரே நேரத்தில் 2 மாதங்கள் வரை தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஆணைக்குழு, இது அதிகபட்சமாக ஒரு வருடம் வரை நீடிக்கப்பட வழிவகுப்பதாக எச்சரித்துள்ளது.
தன்னிச்சையான கைதுகள்
சந்தேகநபர்களை நீதிமன்றத்தின் முன் முன்னிலைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதும், தடுப்புக்காவல் தீர்மானங்கள் சுயாதீன நீதிமன்றத்திற்குப் பதிலாக நிறைவேற்று அதிகாரத்திடம் இருப்பவதும் தன்னிச்சையான கைதுகளுக்கு வழிவகுக்கும்.

பயங்கரவாதக் குற்றங்கள் தொடர்பில் பரந்த வரைவிலக்கணம் அளிக்கப்பட்டுள்ளதால், ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைதியான போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக, ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆயுதப் படைகளுக்கும் கடலோரக் காவல் படைக்கும் வழங்கப்பட்டுள்ள கைது மற்றும் சோதனை அதிகாரங்கள், தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைகளுக்கான அபாயத்தை அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளது.
தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட சில முன்னேற்றங்கள் இதில் காணப்பட்டபோதிலும், சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு ஏற்ப இந்த சட்டமூலத்தை அரசாங்கம் முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
ஹோமாகம இளைஞர் படுகொலை வழக்கில் அதிரடி திருப்பம் - பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam