ஹோமாகம இளைஞர் படுகொலை வழக்கில் அதிரடி திருப்பம் - பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்
ஹோமாகம பொலிஸ் காவலில் இருந்த போது சந்தேக நபர் ஒருவர், உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹோமகம பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவின் அதிகாரிகளால் நேற்று(28.10.2026) கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஹோரண - பல்லப்பிட்டியவைச் சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார்.
விளக்கமறியல் உத்தரவு
இந்தச் சம்பவம் தொடர்பாக, குற்றப்பிரிவின் சம்பந்தப்பட்ட பொறுப்பதிகாரியின் சேவையை 26ஆம் திகதி முதல் இடைநீக்கம் செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு உதவி பொலிஸ் ஆய்வாளர் மற்றும் ஒரு பொலிஸ் சார்ஜென்ட் ஆகியோரின் சேவைகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பாக முறையான மேற்பார்வை செய்யாதது மற்றும் கடமையில் இருந்து தவறியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், ஹோமகம தலைமையக பொலிஸ் ஆய்வாளரின் சேவையையும் உடனடியாக இடைநீக்கம் செய்ய பொலிஸ் காப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தடுப்புக்காவலில் 29 வயது இளைஞர் உயிரிழப்பு
பொலிஸ் மா அதிபர் மீதான முக்கியக் குற்றச்சாட்டுகள் யாதெனில், சந்தேக நபர் காவலில் இருந்தபோது அவரது நிலையை அவர் முறையாக விசாரிக்கவில்லை, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விசாரணை அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கவில்லை.

மேலும் கைது தொடர்பான பதிவேடுகள் சரியாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்பதை முறையாக மேற்பார்வையிடவில்லை உள்ளிட்டவைகளாகும். அக்டோபர் 25ஆம் திகதி, ஹோமாகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு ஒன்று, 490 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், சந்தேக நபரான இஷாரா ஹர்ஷ குமாரவைக் கைது செய்துள்ளது.
கிரிவத்துடுவவைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயது இளைஞர், பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்தார்.
இருப்பினும், பொலிஸ் காவலில் இருந்தபோது நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்களின் விளைவாகவே அவர் உயிரிழந்ததாக இறந்தவரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.