தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பியபோது கைதானவர் மல்லாகம் நீதிமன்றில் முன்னிலை
தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய வேளையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நபர், வழக்கு விசாரணைகளுக்காக இன்று (29.10.2026) யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
யாழ்ப்பாணம் - மாசியப்பிட்டி, அம்மன் கோவிலடியைச் சேர்ந்த கந்தசாமி கிருஷ்ணகுமார் (வயது 50) என்பவரே இவ்வாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கைது நடவடிக்கை
இவர் கடந்த 26ஆம் திகதி தமிழகத்தில் இருந்து விமானம் மூலம் இலங்கை திரும்பிய போதே, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கிருஷ்ணகுமார் கடந்த 2015ஆம் ஆண்டு தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு, 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார்.
சிறப்பு முகாமில் தடுத்து வைப்பு
அதன் பின்னர் திருச்சி சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், அண்மையில் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது தாய்நாடு திரும்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
இந்த 3 எண்களில் பிறந்தவரா நீங்க? உங்க வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பழக்கங்கள் என்ன தெரியுமா? Manithan