இலங்கையில் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு முறையில் ஏற்படும் மாற்றம்
இலங்கையில் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு ஆகிய மூன்றிற்கும் ஒரே இலக்கம் வழங்கப்படவுள்ளது.
அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊவா சப்ரகமுவ பிராந்திய பிரதி பதிவாளர் நாயகம் நிஷாங்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்ட செயலகத்தின் பிரதான கேட்போர்கூட மண்டபத்தில் முன்தினம் உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பிறப்புச் சான்றிதழ்
“2020ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்தவர்களுக்கு தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கௌரவமிக்க சேவையான பதிவாளர் பதவியின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் அனைத்து அதிகாரிகளும் திறம்படச் பணியாற்ற வேண்டும்.
திணைக்களத்தின் மேல்மட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள், சட்டமூலங்கள், புதிய சுற்றறிக்கை மாற்றங்கள் குறித்து அறிமுகப்படுத்துவதும், அறிவுறுத்தல்களை வழங்கப்படும்.
மக்களுக்கான சேவை
அதன்மூலம் பொதுமக்களுக்கு திறமையான மற்றும் முறைசார்ந்த சேவையை வழங்குவதே எங்களது நோக்கமாகும்.

அதற்கு அனைத்து பதிவாளர்களும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். தங்களிடம் சேவைகளை பெற வரும் மக்களை மீண்டும் ஒருமுறை வரவைக்காமல், அவர்களை அலையவிடாமல் விரைவாக அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
சேவை பெறுநர்கள் திருப்தியடையும் வகையில் அவர்களின் தேவைகளை உடனுக்குடனும் துல்லியமாகவும் பூர்த்தி செய்யுங்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவின் பிணை மனு விசாரணை: சர்ச்சையை கிளப்பியுள்ள அலி சப்ரியின் கருத்து - எழுப்பப்பட்டுள்ள கேள்வி