சங்கிலிய மன்னன் கொன்ற 600 கிறிஸ்தவர்கள்: தமிழ் மக்களுக்கு நிரந்தரச் சாபமா
இலங்கையில் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாக ஏற்பட் டுவரும் அழிவுகளுக்கும், முள்ளிவாய்க்கால் போன்ற இனப்படுகொலைகளுக்கும் சங்கிலிய மன்னன் காலத்தில் கொல்லப்பட்ட அந்த 600 கிறிஸ்தவர்களின் 'இரத்தப்பழி' மற்றும் சாபமே காரணம் என்று கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலிய மன்னன் காலத்தில் போர்த்துகீசியர்கள் இலங்கையைக் கைப்பற்றுவதற்கு முன்னர், வர்த்தகத்திற்காக மட்டுமே மன்னாரில் தங்கியிருந்தனர்.
இதன்போது, மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவப் பரதவர், கடையர், பட்டங்கட்டி போன்ற பூர்வகுடி மக்கள் போர்த்துகீசிய பரங்கியர்களின் உபதேசத்தால் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைத் தழுவினர்.
இதைக் கேள்வியுற்ற சங்கிலிய மன்னன், தனது படைகளை அனுப்பி ஆண், பெண், குழந்தை என்ற பாகுபாடின்றி மதம் மாறிய 600-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களைக் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் படுகொலையின் உண்மையான வரலாற்றுப் பின்னணி குறித்த விரிவான தகவல்களை உண்மைகள் நிகழ்ச்சியில் காணலாம்.