இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பாரா அநுர..! வேலைவாய்ப்பின்றித் தவிக்கும் தமிழ் பட்டதாரிகள்
இலங்கையில் ஊழல்வாதிகள் பலர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் பொருளாதாரம் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இதற்காக நாட்டின் தற்போதைய ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகப் பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மாணவர்களின் அவலம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் தற்போது கல்வி பயிலும் சிங்களப் பல்கலைக்கழக மாணவர்கள் பகுதி நேர வேலைவாய்ப்பின் மூலம் 18 ஆயிரம் ரூபாய் வரையில் சம்பளம் பெறுகின்றனர். அதேவேளை, பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்கள் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, 27 வயது வரை வேலைக்குச் செல்லாமல் இருக்கின்றனர்.
அத்துடன், நாட்டைக் கொள்ளையடித்து, பொருளாதார ரீதியில் பாதாள நிலைக்குக் கொண்டுசென்ற முன்னாள் அரசியல் தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கைது செய்யப்படும் நிலையில், போதியளவு ஆதாரங்கள் இல்லாமல் அவர்களின் சொத்துக்களை ஜனாதிபதி அநுரவினால் மீட்க முடியாது.
ஊழல்வாதிகளால் ஏற்பட்ட இழப்புகளை அரசாங்கமும் மக்களுமே சரிசெய்ய வேண்டும். ஏனைய அரசாங்கங்களுடன் ஒப்பிடும்போது, அநுர ஆட்சிக்கு வந்த பின்னர் ஊழல் சற்று குறைந்துள்ளதாகவே அறிய முடிகின்றது என்றார்.
பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஜெயிலர் 2 காட்சி ரத்து, பணத்தை மட்டும் திருப்பி கொடுத்தால் போதுமா.. பொங்கிய சீரியல் நடிகர் Cineulagam