ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய விரைவில் நடவடிக்கை! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையின் கல்வித்துறையில் பல்வேறுபட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வதுடன், ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மகா வித்தியாலத்துக்கு விஜயம் மேற்கொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் கல்வித்துறையில் அடிப்படையான மற்றும் அவசியமான மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் வெற்றிடங்கள்
நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற சுமார் 23,000 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல்கள் மற்றும் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுத்து, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், பாதுகாப்புப் பிரதி அமைச்சருடனும் உயர் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பட்டத்து இளவரசரின் படுகொலை... திகிலூட்டும் 3 கணிப்புகளை வெளியிட்ட அமெரிக்க நாஸ்ட்ராடாமஸ் News Lankasri