அர்னாப் புயல் ஆந்திரக் கரையைக் கடந்தது! இலங்கையின் வானிலையில் புதிய மாற்றம்
மேற்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலைகொண்டிருந்த ‘ஒர்னாப்’ (Arnab) புயல், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கையின் வானிலையில் குறித்த புயலின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
36 மணித்தியாலங்களுக்கான வானிலை
திணைக்களம் வெளியிட்டுள்ள அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பின்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்காலிகமாகப் பலத்த காற்று
இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படலாம்.
எனவே, இவற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நடுவானில் பரபரப்பு! லண்டன் நோக்கிப் பறந்த விமானத்திற்கு நேர்ந்த ஆபத்து - கட்டுநாயக்கவில் அவசரத் தரையிறக்கம்
பட்டத்து இளவரசரின் படுகொலை... திகிலூட்டும் 3 கணிப்புகளை வெளியிட்ட அமெரிக்க நாஸ்ட்ராடாமஸ் News Lankasri