நெதன்யாகுவுக்கு நெருக்கடி! இஸ்ரேல் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகும் அரபுக் கட்சிகள்
இஸ்ரேலில் நேற்று நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவடைந்துள்ளன இந்தநிலையில், பிரதான இரண்டு கூட்டணிகளுமே ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையிலையே உள்ளன.
புதிதாகத் தொடங்கப்பட்ட லிக்குட் (Likud) கட்சிக்கு தலைமை தாங்கும் காடி ஐசென்காட் , "மாற்றத்திற்கான கூட்டணியின்" முதன்மை முகமாக விளங்குகிறார்.
கூட்டாட்சி முறை
இருப்பினும், தற்போதைய முடிவுகளின்படி பெஞ்சமின் நெதன்யாகுவின் 'லிகுட்' கட்சியே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்தநிலையில், நெத்தன்யாகு ஒரு "வலுவான" வலதுசாரி அரசாங்கத்தை அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்; அதேவேளையில் நெதன்யாகுவின் ஆட்சிக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவரவே இஸ்ரேல் மக்கள் வாக்களித்துள்ளனர் என்று ஐசென்காட் உறுதியாகக் கூறிவருகிறார்.

இதற்கிடையில். கடந்த தேர்தலில் 11 ஆசனங்களை பெற்றிருந்த அரபுக்கட்சிகள்;, இந்த தடவை 18 ஆசனங்களை பெறலாம் என்ற நிலையில், ஆட்சியமைப்பதில் தீர்மானிப்பாளர்களாக மாறுமா என்ற கேள்வி தற்போது தொக்கி நிற்கிறது.
இஸ்ரேலின் சிறுபான்மையினரான அரபு சமூகத்தினரைச் சேர்ந்த கட்சிகள் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உருவெடுக்கக்கூடும் என சர்வதேச செய்தியாளர்கள் கூறுகின்றனர் எனினும் இரண்டு கட்சிகளும் அரபுக்கட்சிகளை இதுவரை அரசாங்கம் அமைக்க அழைக்கவில்லை.
இஸ்ரேல் நாடாளுமன்றமான 'நெசெட்'டின் 120 இடங்களுக்கும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. எனினும், வரலாற்றில் இதுவரை எந்தவொரு தனித்து இயங்கும் கட்சியும் தனிப் பெரும்பான்மை பெற்றதில்லை என்பதால், அங்கு எப்போதுமே கூட்டாட்சி முறையிலேயே அரசாங்கங்கள் அமைக்கப்பட்டு வந்துள்ளன.
பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam