தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் இணைந்து எடுத்துள்ள முக்கிய முடிவு
இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய இரண்டு கட்சிகளும் உள்ளூராட்சி சபைகளின் நிதி ஒதுக்கீடு, அபிவிருத்தி வேலைகள் போன்ற விடயங்களிலே ஒரே கட்சியைப் போல இயங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம்
மேலும் தெரிவிக்கையில்,
இந்த சந்திப்பிலே உள்ளூராட்சி சபைகளிலே எங்களுடைய இரண்டு கட்சிகளினுடைய உறுப்பினர்கள் இணங்கி சேர்ந்து செயற்படுகிற முக்கியத்துவத்தைப் பற்றி ஆராய்ந்திருக்கிறோம்.
அதன் பிரதிபலனாக இரண்டு கட்சிகளும் எங்களுடைய உள்ளூராட்சி தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு விளக்கமான அறிவுறுத்தல்கள் கொடுப்பதாக தீர்மானித்திருக்கிறோம்.

அதாவது இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து இயங்குவதற்கான முக்கியத்துவத்தை அறிவித்து உள்ளூராட்சி சபைகளிலே விசேஷமாக நிதி ஒதுக்கீடு, அபிவிருத்தி வேலைகள் போன்ற விடயங்களிலே ஒரே கட்சியைப் போல இயங்குவது நல்லது அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் இரு தரப்பாலும் அறிவுறுத்தல்கள் கொடுப்பது என்று தீர்மானித்திருக்கிறோம்.
அதற்கு மேலதிகமாக தற்போது அறிமுகப்படுத்தப்படுகிற அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கிற சட்டம் மற்றது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய சட்டம் பற்றி கலந்துரையாடினோம்.
இந்த இரண்டும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கி கொண்டுவரப்படுகிற சட்டங்களாக காணப்படுகிறது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் இல்லாத பல விடயங்கள் இந்த இரண்டு சட்டங்களின் மூலமாகவும் கொண்டுவரப்படுகிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்
ஒரு உதாரணத்தைச் சொல்வதாக இருந்தால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்திலே குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பொலிசார் கொடுக்கப்படுவது நீதிமன்றத்திலே ஏற்புடையதாக இருந்தது அது மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி இருந்தது.
புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிற அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கிற சட்டத்திலே அந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இல்லை அதை நீக்கிவிட்டதாக சொல்லுகிறார்கள்.

ஆனால் அது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்திலே அறிமுகப்படுத்தப்படுகிறது. அகவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்திலே இருந்த மோசமான அனைத்து விடயங்களும் இந்த இரண்டு சட்டங்களுக்குள்ளேயும் அடங்குகின்றன.
அதைவிட கூடுதலான மிகவும் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் இந்த இரண்டு சட்டங்களிலேயும் கொண்டுவரப்படுகிறது.
இது சம்பந்தமாக நாங்கள் இணைந்து ஒரு போராட்டம் ஒன்றை நடத்துவதாகவும் தீர்மானித்திருக்கிறோம். அதன் விவரங்களை நாங்கள் பின்னர் எங்களுடைய கட்சி ஆதரவாளர்களோடும் உறுப்பினர்களோடு பேசி அதனை அறிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
BMW வாகன வழக்கில் முக்கியத் திருப்பம்: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை ஏற்றுகொண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ