அரச பெருந்தோட்ட நிலங்களை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்க அமைச்சரவை ஒப்புதல்
பயன்பாடற்ற அரச பெருந்தோட்ட நிலங்கள், சுற்றுலாப் பங்களாக்கள் மற்றும் இயங்காத தொழிற்சாலைகள் உள்ளிட்ட 15 சொத்துகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சொத்துகள் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் (SLSPC), ஜனதா எஸ்டேட் அபிவிருத்தி சபை (JEDB) மற்றும் எல்கடுவை பிளான்டெஷன் லிமிடெட் ஆகியவற்றின் கீழ் உள்ளன.
விருப்ப வெளிப்பாடு
முதற்கட்டத்தில் 1,514 ஹெக்டேர் நிலம், 10 சுற்றுலாப் பங்களாக்கள்/வழிகாட்டல் இடங்கள் மற்றும் 15 இயங்காத தொழிற்சாலைகளுக்கு விருப்ப வெளிப்பாடு கோரப்பட்டது.

இதில் 470 முதற்கட்ட விருப்ப வெளிப்பாடுகளும் (EOI), அதைத் தொடர்ந்து 30 சொத்து அலகுகளுக்கு 44 முறையான திட்ட முன்மொழிவுகளும் பெறப்பட்டுள்ளன.
உயர் மட்டக் கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 15 சொத்துகளுக்கான குத்தகை உரிமைகளை வழங்க, அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.