மும்முனை ஒருநாள் போட்டித் தொடரில் இலங்கை இறுதிப் போட்டிக்கு
முன்னேற்றம் இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கும் மும்முனை ஓருநாள் சர்வதேச போட்டித் தொடரில் இலங்கை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுக் கொண்டுள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத் தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக பாபர் அசாம் 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் டில்சான் மதுசங்க 5 விக்கெட்களையும், சஹான் ஆராச்சிகே 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.1 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 114 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
போட்டியின் ஆட்டநாயகனாக செஹான் ஆராச்சிகே தெரிவு செய்யப்பட்டார். இந்த மும்முனை ஒருநாள் சர்வதேச ஓருநாள் போட்டித் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.