அடுத்த வருடம் நாட்டில் பசியால் போராட்டம் உருவாகுமா! எதிர்க்கட்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்
இலங்கையில் பொருளாதார ரீதியில் குறைந்த மட்டத்தில் இருக்கக்கூடியவர்களின் வருமானம் அடுத்த வருடம் அதிகரிக்கப்படும் என சமூக செயற்பாட்டாளர் த.க. ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் “நேருக்கு நேர்” நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வருடம் தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் நாட்டு மக்களின் வாழ்வதாரம் வளப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எஸ்.எம்.மரிக்கார் அடுத்த வருடம் நாட்டில் பசியால் போராட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் முரணாணவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தேர்தல் காலத்தில் தேசியமக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களைப் பரப்பி மக்களை திசை திருப்ப நினைத்தாலும் அது சாத்தியமற்ற விடயமாக மாறும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,