சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் ஆரம்பமான நேரடி விமான சேவை
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த எடெல்வைஸ் ஏர் (Edelweiss Air) விமான நிறுவனம், இலங்கைக்கான தனது குளிர்கால விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே வாரத்திற்கு மூன்று விமானங்கள் இயக்கப்படுகின்றன.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) தகவலின்படி, இச்சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து இணைப்பு வலுப்பெற்றுள்ளது.
மீண்டும் சேவை ஆரம்பம்
எடெல்வைஸ் ஏர் விமானத்தில் இலங்கைக்கு வருகை தந்த பயணிகள், இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய கண்டிய நடன நிகழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டனர்.

இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பை வழங்கும் நோக்கில் இந்தக் கலாசார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கையின் உச்ச சுற்றுலாப் பருவத்தில் சுவிட்சர்லாந்திலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் வகையில், எடெல்வைஸ் ஏர் நிறுவனத்தின் குளிர்கால விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
