கஜ்ஜா கொலை வழக்கில் தேடப்பட்ட பெண் வெளிநாடொன்றில் அதிரடியாக கைது
புதிய இணைப்பு
"கஜ்ஜா" கொலை வழக்கில் சர்வதேச பொலிஸாரின் (Interpol) சிவப்பு எச்சரிக்கை மூலம் தேடப்பட்டு வந்த ‘அச்சினி’ என்றழைக்கப்படும் அனுஷா லக்மாலி துபாயில் கைது செய்யப்பட்டு, இன்று காலை (27) சிறப்பு பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இன்று (27) காலை 05.20 மணிக்கு, துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கஜ்ஜாவுக்கு கடைசி தொலைபேசி அழைப்பு
விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் அவரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், அவர் பலத்த பாதுகாப்புடன் கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவு தலைமையகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

34 வயதான இந்த பெண், மித்தெனியாவில் உள்ள கட்டுவன பகுதியைச் சேர்ந்தவர் என்றும், இவர் "கஜ்ஜா" என்ற நபருடன் நெருங்கிய உறவைப்பேணி வந்தவர் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், கஜ்ஜாவுக்கு கடைசி தொலைபேசி அழைப்பையும், குறுஞ்செய்தியையும் (மெசேஜ்) இவர் தான் அனுப்பியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
பெக்கோ சமன் என்ற நபரின் அறிவுறுத்தலின் பேரில் "கஜ்ஜா"வையும் அவரது இரண்டு குழந்தைகளையும் உணவிற்காக ஒரு உணவகத்திற்கு அழைத்ததும் குறித்த பெண் தான் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதலாம் இணைப்பு
சர்வதேச பொலிஸாரின் (Interpol) சிவப்பு எச்சரிக்கை மூலம் தேடப்பட்டு வந்த ‘அச்சினி’ என்றழைக்கப்படும் அனுஷா லக்மாலி ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய, அவர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்ட நடவடிக்கை
‘கஜ்ஜா’ என்றழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில், அனுஷா லக்மாலி பிரதான சந்தேகநபராக தேடப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகப் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதெல்லாம் நிக்காது, எல்லாரும் எம்ஜிஆர், ஜோசப் விஜய் ஆகிட முடியாது! தனுஷ் பற்றி துரைமுருகன் Cineulagam