சஹ்ரான் குழுவை இயக்கியவர்களும் கஸ்ஸப்ப குழுவையும் இயக்கியவர்களும் ஒரே தரப்பா! வெடித்துள்ள சர்ச்சை
கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு கஸ்ஸப்ப தேரர் மற்றும் முன்னாள் அரசியல்வாதி சரத் வீரசேகர ஆகியோர் சென்றதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளமை அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காட்சிகளில், இருவரும் முகத்தை மூடிய நிலையில் ஹோட்டலுக்கு வந்து சென்றதாகக் கூறப்படும் நிலையில், இந்த வருகையின் பின்னணி தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
கசப்ப தேரர் வெறுங்கையுடன் ஹோட்டலுக்குச் சென்று, பின்னர் பெரிய பையொன்றுடன் வெளியேறுகின்றமையும் காணொளியில் தெளிவாக தெரிகின்றது. எனினும், அந்தப் பையில் என்ன இருந்தது என்பது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.
இதற்கிடையில், தனக்கு 108 டிகிரி காய்ச்சல் இருந்ததால் முகத்தை மூடிக்கொண்டு சென்றதாகக் கசப்ப தேரர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், அனுமதியின்றி சிசிடிவி காட்சிகளை வெளியிட்டதாகக் கூறி ஹோட்டல் நிர்வாகத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
மறுபுறம், இந்த விவகாரத்திற்கும் விகாரமாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்திற்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் காணொளியில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
மத மற்றும் இனவாதக் கருத்துகள் மூலம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் அரசியல் நோக்கம் இருப்பதாகவும் அதில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
எனினும், இக்குற்றச்சாட்டுகள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் இல்லை. 2019 ஈஸ்டர் தாக்குதலின் போது தீவிரவாதக் குழுவினர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்றது போலவே, தற்போதும் கசப்ப தேரர் மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் ரகசியமாக ஹோட்டலுக்கு வந்து சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்று சிசிடிவி காட்சிகள் வெளியாகாததால் தாக்குதலைத் தடுக்க முடியவில்லை, ஆனால் இன்று ஹோட்டல் நிர்வாகம் இத்தகைய ரகசியச் சந்திப்புகளை முன்கூட்டியே சிசிடிவி மூலம் வெளிப்படுத்தியதன் மூலம், நாட்டைக் குழப்ப நினைக்கும் ஒரு பாரிய சதித்திட்டத்தைத் தடுத்திருப்பதாக குறிப்பிடுகிறது.
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த சூழ்ச்சி போலவே, தற்போது மத மற்றும் இனவாத கருத்துகளைப் பரப்பி வன்முறையைத் தூண்டி, அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்க இத்தகைய ரகசியக் கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது Newsinsights நிகழ்ச்சி..