தொடரும் சீரற்ற காலநிலை : மன்னார் மாவட்டத்தில் அதிக பாதிப்பு
வடக்கு மாகாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை மற்றும் கடும் மழை காரணமாக மன்னார் மாவட்டம் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் சாந்திபுரம் பகுதியில் இடம்பெற்ற இடி மின்னல் தாக்கம் காரணமாக 5 வீடுகள் பாரியளவில் சேதமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் மழை காரணமாக
இதேவேளை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெள்ளப்பெருக்கு காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள சீதுவிநாயகர்புரம் மற்றும் கூராய் ஆகிய பகுதிகளின் போக்குவரத்துக் கட்டமைப்புகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியில் தொடரும் நீர்வரத்து மற்றும் வெள்ள அபாயம் காரணமாக, அங்கு வசிக்கும் 60 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150 பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தொடரும் மழை காரணமாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளையும் நிவாரணப் பணிகளையும் வழங்கும் நடவடிக்கைகளில் உள்ளூர் நிர்வாகத்தினரும் பாதுகாப்புப் பிரிவினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்னாப் மிகத் தீவிர சூறாவளியாக மாறும் வாய்ப்பு! கடலில் உள்ளவர்களை உடன் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு உத்தரவு


பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri