கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள காத்திருப்போரின் கவனத்திற்கு
கடவுச் சீட்டு பெற்றுக்கொள்வதற்கு காத்திருப்போருக்கு விசேட அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பிராந்திய அலுவலகங்கள் மூலம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஆன்லைன் முறையில் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யும் வசதியை அக்டோபர் 29 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, பொதுமக்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குப் (www.immigration.gov.lk) பிரவேசித்து, தங்களுக்கான திகதி மற்றும் நேரத்தை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ள முடியும்.

இவ்வசதியானது கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா மற்றும் மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்கள் ஊடாகக் கிடைக்கும் எனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், பத்தரமுல்லையில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில் கடவுச்சீட்டு பெறுவதற்கு இந்த ஆன்லைன் முன்பதிவு முறை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு வழக்கம்போல அங்கு நேரடியாகச் சென்று சேவைகளைப் பெற முடியும் என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.