யோஷித - வசந்த கரன்னாகொட வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிரான ஊழல் வழக்கு எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(28) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் முன்விசாரணை மாநாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
வழக்கு ஒத்திவைப்பு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேவையான தகைமைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறப்படும் நிலையில், யோஷித ராஜபக்சவை பிரித்தானியாவிலுள்ள ரோயல் கடற்படைக் கல்லூரியில் பயிற்சிக்காக அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகிய இருவருக்கும் எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
BMW வாகன வழக்கில் முக்கியத் திருப்பம்: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை ஏற்றுகொண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ