ஸ்பெயினில் இரு அதிவேக தொடருந்துகள் மோதி கோர விபத்து: 39 பேர் பலி - பலர் படுகாயம்
ஸ்பெயினில் இரண்டு அதிவேக தொடருந்துகள் மோதிக்கொண்டதில் குறைந்தது 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(28.10.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இன்றைய தினம்(28) காலை 9 மணியளவில், இரண்டு தொடருந்துகளும் மோதிக்கொண்டதில், இரண்டு பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
39 பயணிகள் உயிரிழப்பு
இதன்போது, 39 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோரா மற்றும் ஓர்காஸ் நகரங்களுக்கு இடையே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், மாட்ரிட்டிலிருந்து செவில்லுக்குச் சென்றுகொண்டிருந்த ரென்ஃபே மற்றும் இரியோ அதிவேக தொடருந்துகள் இதில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் தொடருந்து திணைக்கள அதிகாரி அடிஃப் (Adif) தெரிவித்துள்ளார்.
மத்திய நகரமான டோலிடோவிற்கு அருகிலுள்ள உர்தாவின் மேயர் மானுவல் கலன், காயமடைந்தவர்களுக்கு இடமளிக்க ஒரு விளையாட்டு அரங்கத்தைத் தயார் செய்யுமாறு அவசர சேவைகள் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு தொடருந்துகள் பின்னால் மோதிக்கொண்டதைத் தொடர்ந்து, மாட்ரிட்-அந்தலூசியா அதிவேக தொடருந்து பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



ராஜபக்சக்களின் நெருக்கமான நபரின் சர்ச்சைக்குரிய தகவல்கள் - பெண்ணின் வாக்குமூலத்தில் கசியவுள்ள இரகசியங்கள்
பட்டத்து இளவரசரின் படுகொலை... திகிலூட்டும் 3 கணிப்புகளை வெளியிட்ட அமெரிக்க நாஸ்ட்ராடாமஸ் News Lankasri
பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam