பிள்ளைகளால் கைவிடப்பட்டுள்ள மகிந்த
நிதி குற்றச்சாட்டுகள் தொடர்பில் 50 நாட்களுக்கும் மேலாக நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஏனைய 2 சகோதரர்களும் கைவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாமல் ராஜபக்சவிற்கு பிணை பெறுவதற்காக பல விசேட கருத்துக்களை ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி நேற்று நீதிமன்றத்தில் முன்வைத்தார்.
அதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் ஷிரந்தி ராஜபக்ச ஆகிய இருவருமே தீவிர நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என வெளிப்படுத்தியமை அதில் ஒரு விசேட விடயமாகும்.
மகிந்தவின் பரிதாப நிலை
அதனை தவிர, 81 வயதான மகிந்த ராஜபக்ச மனச்சோர்வு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் அவரைக் கவனித்துக் கொள்வதற்கு ஷிரந்தி ராஜபக்சவைத் தவிர நாமல் ராஜபக்ச மட்டுமே உள்ளார் என்பதும் மிக முக்கியத்துவம்பெற்ற விடயமாக மாறியுள்ளது.

அதற்கமைய, ரோஹித மற்றும் யோசித ஆகிய இரு புதல்வர்களும் தமது தந்தையைக் கவனித்துக்கொள்வதில்லை என்பதை ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி நீதிமன்றத்தில் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.