மீண்டும் அதே சம்பவம்! ஆசியக் கிண்ணத்தை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
எனினும், வெற்றிக்குப் பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கிண்ணத்தைப் பெற இந்திய வீராங்கனைகள் முன்வரவில்லை.
மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி
இந்திய வீராங்கனைகள் மேடைக்கு வராத நிலையில், ACC தலைவர் மொஹ்சின் நக்வி உள்ளிட்ட அதிகாரிகள் சாம்பியன் அணியை எதிர்பார்த்து மேடையில் காத்திருந்தனர்.
📸📸
— BCCI Women (@BCCIWomen) September 13, 2026
A picture-perfect moment to cap off a successful and unbeaten #WomensAsiaCup campaign 🏆#TeamIndia | #INDvSL pic.twitter.com/gzmoDKtUL9
மறுபுறம், இலங்கை வீராங்கனைகள் பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு, இரண்டாம் இடத்திற்கான காசோலையைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த சம்பவம் கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஆடவர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியை நினைவுபடுத்தியுள்ளது.
இந்தியா–பாகிஸ்தான்
அப்போதும் பட்டம் வென்ற இந்திய ஆடவர் அணியினர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கிண்ணத்தைப் பெற மறுத்திருந்தனர்.
Indian Women's Team refused to take Asia Cup Trophy from Mohsin Naqvi
— Nafees (@Nafees_22) September 13, 2026
Look at Mohsin Naqvi face 🤣🤡 https://t.co/zxAOnLxc6J pic.twitter.com/SyaGMYMBzm
மொஹ்சின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராகவும் இருப்பதுடன், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்தியா–பாகிஸ்தான் இடையிலான தொடர்ச்சியான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக இருக்கும் நக்வியிடம் இருந்து கிண்ணத்தைப் பெற இந்திய அணி விரும்பாததே இந்த முடிவுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.