கடற்பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர சிவப்பு எச்சரிக்கை! வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (30) வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்
இந்த எச்சரிக்கை, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும், காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக கல்பிட்டிய வரையிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு பொருந்தும் என அறிவித்துள்ளது.

இந்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 - 70 கி.மீ. வரை அதிகரிக்கும், மேலும் கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மன்னார் முதல் கொழும்பு வரையிலும், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடலோரப்பகுதிகளில் 2.0 - 2.5 மீட்டர் வரை கடல் அலைகள் எழ வாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை இந்த கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால அறிவிப்புகள் குறித்து மீன்பிடி மற்றும் கடற்படைத்தரப்பினர் விழிப்புடன் இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொள்கின்றது.
கொழும்பு பிறந்த நாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு! வங்கி கணக்கிலிருந்து கைமாற்றப்பட்ட பணம் - சிக்கிய சந்தேகநபர்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam