அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழக்க முயற்சி
ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் கழிப்பறையில் தவறான முடிவெடுத்து உயிரிழக்க முயன்றுள்ளார்.
திறப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், கவலைக்கிடமான நிலையில் தற்போதைக்கு அநுராதபுர பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
மேலதிக விசாரணை
இந்தநிலையில், அவர் சிறைச்சாலைக் கழிப்பறையில் துணித் துண்டுகளால் செய்யப்பட்ட கயிற்றின் உதவியுடன் தவறான முடிவெடுத்து உயிரிழக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்த மற்ற கைதிகள், இந்தச் சம்பவம் குறித்து சிறை அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், பின்னர் அந்த கைதியை மீட்டு சிகிச்சைக்காக அநுராதபுர பொது மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர்.
அவர் தவறான முடிவெடுக்க முயன்றதற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அநுராதபுர பொலிசார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
YOU MAY LIKE THIS VIDEO
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri