சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான சுகீஸ்வர பண்டார, இன்று காலை (30.07.2026) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்று, அதன் மூலம் அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, சுகீஸ்வர பண்டார ஜூன் 18 அன்று கைது செய்யப்பட்டார்.
சி.டி.விக்ரமரத்னவின் இறுதி நிமிடங்களில் இடப்பட்ட உத்தரவு.. ஒரு சில நிமிடங்களில் பிரிந்த உயிர்! உணர்ச்சிவசப்பட்ட 16 வருட கால விசுவாசி
நிதி முறைகேடு தொடர்பாக
இதற்கிடையில், ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக, சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் ஊழல் தடுப்புக் குழு, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (CCIB) முறைப்பாடு அளித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில், சுகீஸ்வர பண்டார 2022இல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியதும், அதே காலகட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் இயக்குனர் பதவியையும் வகித்ததும் தெரியவந்தது.
இதன் அடிப்படையில், அவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அதன்படி, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam